மேலும் செய்திகள்
ஒருவர் மீது கஞ்சா வழக்கு
16-Apr-2025
சின்னமனூர் : சின்னமனூர் நகராட்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளர் தர்மராஜ் 53, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சின்னமனூர் திருவள்ளுவர் பள்ளி தெரு தர்ம ராஜ் 53. இவர் இங்குள்ள நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றினார். 2 ஆண்டுகளாக மனநலம் பாதித்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டிற்குள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்றிருந்த மனைவி அம்பிகா, வீட்டிற்குள் வந்த போது, கணவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அலறி சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தர்மராஜை கீழே இறக்கி சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்ததை உறுதி செய்தனர். மனைவி அம்பிகா புகாரின்பேரில் சின்னமனூர் எஸ். ஐ. இளையராஜா வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.
16-Apr-2025