உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஐயப்ப பக்தர் வாகனம் மோதி துாய்மைப் பணியாளர் பலி

ஐயப்ப பக்தர் வாகனம் மோதி துாய்மைப் பணியாளர் பலி

கூடலுார், : கூடலுார் அருகே ஐயப்ப பக்தர் வாகனம் மோதி துாய்மைப் பணியாளர் பலியானார்.கூடலுார் அரசு விதைப்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் போத்துராஜ் 52. ஓடைத்தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் 32. இருவரும் புதுப்பட்டி பேரூராட்சியில் தற்காலிக துாய்மைப் பணியாளர்களாக உள்ளனர். டூவீலரில் நேற்று காலை புதுப்பட்டி நோக்கி செல்லும் போது கூடலுார் பைபாஸ் பிரிவில் சபரிமலையில் இருந்து தரிசனம் முடித்து திரும்பிய தெலுங்கானாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வந்த கார், மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே போத்துராஜ் பலியானார். தமிழரசன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். கூடலுார் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை