உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மலை மீது ஏறி போராட்டம்

மலை மீது ஏறி போராட்டம்

கம்பம்: காமயகவுன்டன்பட்டியில் சங்கிலி கருப்பன் மலை உள்ளது. தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் சங்கிலி தலைமையில் கட்சியினர், பொதுமக்கள் இந்த மலையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கருப்பன் மலையில் கல் உடைக்கும் உரிமத்தை மகளிர் சுய உதவிக்குழுவிற்கு வழங்க வேண்டும், கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கிய குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி கோஷமிட்டனர். கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்வதை தடுக்கவிட்டால் மலையில் குடியேறி போராட்டம் நடத்துவோம் என கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ