முதல்வர் கோப்பை கபடி தேனி மூன்றாமிடம்
தேனி: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளில் நடந்தது. மாவட்டம், மண்டல அளவில் நடந்த போட்டிகள் முடிந்துள்ளது. மாநில அளவிலான போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. மாற்றுதிறனாளிகள் ஆண்கள் பிரிவில் கபடி போட்டி செங்கல்பட்டில் நடந்தது. இதில் தஞ்சை அணி முதலிடம், திருநெல்வேலி அணி இரண்டாமிடமும் வென்றது. தேனி அணி சிவகங்கை அணியை வென்று மூன்றாமிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணியில் தேனியை சேர்ந்த சக்திவேல், பாலாஜி, சஞ்சய்குமார், பாலமுருகன், தினேஷ், மாரிஸ்வரன், சதீஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.