மேலும் செய்திகள்
உயரும் சண்முகாநதி அணை நீர் மட்டம்
30-May-2025
கம்பம்: மேகமலையில் சில நாட்களாக அதிகபட்ச குளிர், பனி மூட்டம், சாரல் மழை என சீதோஷ்ண நிலை மாறியதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.தேனி மாவட்டம் மேகமலையில் தேயிலை தோட்டங்கள், வன உயிரினங்களின் நடமாட்டம், ரோட்டை ஒட்டியே செல்லும் நீர்த் தேக்கம், என மூணாறுக்கு இணையான சீதோஷ்ண நிலை உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் தினமும் குவிந்து வருகின்றனர்.மேகமலையில் ஆரம்பித்து ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராசா மெட்டு வரை பசுமைப் பள்ளத்தாக்காக உள்ளது. இங்குள்ள தூவானம் பகுதி மிகவும் ரம்மியமாக இருக்கும். கடந்த ஒரு மாதமாக சாரல் மழை பெய்து வருகிறது. உச்சபட்ச குளிர், பனிமூட்டம், வானம் மேக மூட்டமாக உள்ளது. சீதோஷ்ணநிலை அப்படியே தலைகீழாக மாறியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. தொடர் சாரல் காரணமாக இங்குள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இரவங்கலாறு அணையிலிருந்து எடுக்கும் தண்ணீரை பயன்படுத்தி சுருளியாறு மின் நிலையத்தில் 20 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
30-May-2025