உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசுத்துறைகள் தயார் நிலையில் இருக்க கலெக்டர் அறிவுறுத்தல்

அரசுத்துறைகள் தயார் நிலையில் இருக்க கலெக்டர் அறிவுறுத்தல்

தேனி : தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது. இதனால் கேரள மாநிலத்தை ஒட்டி உள்ள கோவை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, குமரி மாவட்டங்களில் சாரல் மழை முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாற்று கரை ஓரங்கள், கம்பம், குமுளி, போடி மலைப்பாதைகளை தொடர்ந்து கண்காணிக்க கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.மேலும், பொதுமக்கள் தங்குவதற்காக அரசு கட்டடங்கள், வெள்ளதடுப்பிற்கான மணல் மூடைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்டடவையும் தயார் நிலையில் வைத்திருக்க கலெக்டர் கூறிஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி