உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

கம்பம்: ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் முடிவிற்கு வர உள்ள நிலையில், பரஸ்பரமாக கலெக்டரும், ஊராட்சி தலைவர்களும் சால்வை அணிவித்து வாழ்த்த்துக்களை பரிமாறி கொண்டனர்.மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகள் தலைவர்களின் பதவி காலம் ஜன 5 ல் முடிவடைகிறது. எனவே ஊராட்சி தலைவர்களை நேற்று கலெக்டர் ஷஜீவனா அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது நிலுவையில் உள்ள பணிகளை முடித்து தார வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த தலைவர்கள், கனிம வள நிதி ஒதுக்கீட்டை ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும். அந்த நிதியை ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள் என்றனர். கனிம வள நிதியை வீடு கட்டும் திட்டத்திற்கு பயன்படுத்த அரசு கூறி உள்ளது என்றார். அதற்கு ஊராட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சி நிதியை ஊராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்குங்கள் என்றனர். பின்னர் ஊராட்சி தலைவர்கள் சார்பில் கலெக்டருக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. கலெக்டரும் சால்வை அணிவித்து தலைவர்களை பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !