குமுளியில் கலெக்டர் ஆய்வு
கூடலுார்: குமுளியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகளை தேனி கலெக்டர் ரஞ்ஜித் சிங் ஆய்வு மேற்கொண்டார்.குமுளியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. 2023 நவம்பரில் பூமி பூஜைடன் துவங்கிய பணி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடந்து வந்தது. விரைவில் கட்டுமான பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் கட்டுமான பணியை பார்வையிட்டு சுற்றுச்சுவர், உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்க மேலும் நிதி ஒதுக்குவதாக அறிவித்தார்.இந்நிலையில் நேற்று கலெக்டர் ரஞ்ஜித் சிங் கட்டுமான பணியை ஆய்வு செய்தார். பணியை ஒரு மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். போக்குவரத்து துணை மேலாளர் ஜெகதீசன், உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன், கூடலுார் நகராட்சி கமிஷனர் கோபிநாத் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.