உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரி விளையாட்டு விழா

கல்லுாரி விளையாட்டு விழா

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.கல்லுாரி செயலாளர் மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம், கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தேசிய கூடைப்பந்தாட்ட வீராங்கனை சூரியதர்ஷினி பங்கேற்றார். விழாவில் உறவின் முறை துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், உறவின்முறை பத்ரகாளியம்மன் கோவில் தேவஸ்தான செயலாளர் சுப்புராம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவஸ்தான செயலாளர் ராமர்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !