உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதி செலுத்த அறிவுறுத்தல்

நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதி செலுத்த அறிவுறுத்தல்

தேனி: தேனி தொழிலாளர் நலத்துறை அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளதாவது: தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஓட்டல்கள், தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தொழிலாளர் பங்கு ரூ.20, நிறுவனத்தின் பங்கு ரூ. 40 என கணக்கிட்டு செலுத்த வேண்டும். தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தாண்டிற்கான தொழிலாளர் நல நிதியை 2026 ஜன., 31க்குள் செலுத்த வேண்டும். தொழிலாளர் நல நிதி மூலம் தொழிலாளர்கள், அவர்களை சார்ந்தவர்களுக்கு கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம், பாடநுால், விளையாட்டு உள்ளிட்டவற்றிற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் தொழிலாளியின் மாத வருமானம் ரூ.35 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். தொழிலாளர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை 006 என்ற முகவரிக்கு 2025 டிச., 31க்குள் அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை