உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார்

 மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார்

கூடலுார்: கூடலுாரில் 8 ஆண்டுகளாக பராமரித்து வளர்த்து வந்த மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சோலைக்குள் கூடல் அமைப்பினர் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தனர். கூடலுாரில் சோலைக்குள் கூடல் அமைப்பு 2015ல் துவக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் கண்மாய் கரைப் பகுதி, 18ம் கால்வாய் கரைப்பகுதி, லோயர்கேம்ப், கம்பம் தேசிய நெடுஞ்சாலை, நகர் பகுதி, குள்ளப்பகவுண்டன்பட்டி ரோடு, குடியிருப்பு பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். பல இடங்களில் இவர்கள் பராமரித்து வந்த மரங்கள் நன்கு வளர்ந்து பசுமையாக காட்சி தருகிறது. இந்நிலையில் நேற்று பெட்ரோல் பங்க் ரோட்டில் எட்டு வயதுடைய புங்கன் மரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் அடிப் பாகத்தில் வெட்டியுள்ளனர். 8 ஆண்டுகளாக பராமரித்து வளர்த்து வந்த மரத்தை வெட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சோலைக்குள் கூடல் அமைப்பினர் நகராட்சி அதிகாரியிடம் புகார் செய்தனர். கமிஷனர் முத்துலட்சுமி மேற்பார்வையாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் விவேக் பார்வையிட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ