உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊராட்சி செயலாளர்களுக்கு கணினி பயிற்சி வகுப்பு துவக்கம்

ஊராட்சி செயலாளர்களுக்கு கணினி பயிற்சி வகுப்பு துவக்கம்

தேனி: மாவட்ட ஊராட்சி சார்பில் ஊராட்சி செயலாளர்களுக்கு கணினி மூலம் வரி உள்ளிட்டவை பதிவேற்றவது தொடர்பான பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கின. பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வள பயிற்சி மையத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கான கணினிப் பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கின. பயிற்சி வகுப்பை மாவட்ட ஊராட்சி செயலாளர் குமரேசன் துவக்கி வைத்தார். வட்டார வள பயிற்றுநர் அன்னலட்சுமி, மாவட்ட வளமைய அலுவலர் கீர்த்தி ஆனந்த், ஊராட்சி செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் ஊராட்சி செயலாளர்களுக்கு பயிற்சி வழங்கினர். பயிற்சியில் கணினி மூலம் செய்யப்படும் வரி வசூல் தொடர்பான தகவல்களை பதிவேற்றுவது, ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் பற்றி பதிவேற்றம் செய்வது, பதிவேடுகள் பராமரிப்பு உள்ளிட்டவை பற்றி பயிற்சி வழங்கப்பட்டன. ஒரு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்களுக்கு இரு நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி