உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  காங்., ஆர்ப்பாட்டம்

 காங்., ஆர்ப்பாட்டம்

தேனி: தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முறைகேடுகளை கண்டித்து தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே காங்., கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி கோஷமிட்டனர். அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி, உருவ பொம்மையை பறித்து சென்றனர். இதனால் போலீசாருக்கும், காங்.,நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் சன்னசி, தேனி நகர தலைவர் சம்சுதீன், போடி நகர தலைவர் முஷாக் மந்திரி, நிர்வாகி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை