காங்கிரஸ் கண்டன கூட்டம்
மூணாறு:சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மூணாறில் காங்கிரஸ் சார்பில் கண்டன கூட்டம் நடந்தது. அந்த மாநிலத்தில் ஆள் கடத்தல், கட்டாய மதமாற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் ப்ரீத்திமேரி, வந்தனாபிரான்சிஸ் ஆகியோர், அம்மாநில போலீசாரால் ஜூலை 25ல் கைது செய்யப்பட்டனர். அச்சம்பவத்தை கண்டித்து கேரளாவில் கிறிஸ்தவ அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், மாநிலம் முழுதும் நேற்று காங்கிரஸ் சார்பில் கண்டன கூட்டங்கள் நடந்தன. மூணாறில் காங்கிரஸ் தேவிகுளம் ஒன்றியம் சார்பில் கண்டன கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.மணி துவக்கி வைத்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, ஜெயராஜ், ஒன்றிய துணை தலைவர் ராஜன், மூணாறு மண்டல தலைவர் நெல்சன், ஐ.என்.டி.யு.சி. வட்டார தலைவர் குமார், மூணாறு ஊராட்சி தலைவர் மணிமொழி உட்பட பலர் பங்கேற்றனர்.