மேலும் செய்திகள்
தி.மு.க., ஆலோசனை கூட்டம்
04-Feb-2026
தேனி: தேனியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே காங்கிரஸ் மாவட்ட இளைஞரணி சார்பில் இளைஞரணி தலைவர் ராஜாமுகமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக நேருசிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தை மாநில காங்., மருத்துவப்பிரிவு மாநில தலைவர் தியாகராஜன் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும், மகாத்மா காந்தி பெயரை வேலை உறுதி திட்டத்தில் நீக்கியதை கண்டித்தும், கூட்டணியில் போடி தொகுதியை காங்.,க்கு ஒதுக்க கோரியும் கோஷமிட்டனர். முன்னாள் மாவட்ட தலைவர் முருகேசன், கட்சியின் தேசிய இளைஞரணி பொதுச்செயலாளர் முகமது ஷாகித், மாவட்ட பொதுச்செயலாளர் கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
04-Feb-2026