ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு தேனியில் ஆலோசனை கூட்டம்
தேனி: தேனி அரசு ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் சார்பில், மாநில மாநாடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சன்னாசி தலைமை வகித்தார்.நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் மண்டலத் தலைவர் பாண்டியராஜ் வரவேற்றார். கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் திரிசங்கு பேசினார். மாநில துணைத் தலைவர் முத்துகோவிந்தன், மாநிலச் செயலாளர்கள்வெங்கடேசன், முருகேசன் பேசினர். பின் ஒப்பந்ததாரர்களின் சந்தேகங்களுக்கு நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.நிகழ்ச்சியை இந்திய கட்டுநர் சங்க முன்னாள் தேனி மைய தலைவர்கள் பொறியாளர்கள் நந்தகுமார், ஜாகீர்உசேன் தொகுத்து வழங்கினர். பணி முடிந்தும் பல மாதங்களாக நிலுவையில் உள்ள பில் தொகையை உடனடியாக ஊரக வளர்ச்சித்துறை விடுவிக்க சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள் முன் வைத்தனர். இதற்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்திய கட்டுநர்சங்கத்தின் தேனி மையப் பொருளாளர் அமிதாபச்சன் நன்றி தெரிவித்தார்.