கூட்டுறவு வார விழா விளையாட்டு போட்டி
தேனி: தேனி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழாவையொட்டி கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் நர்மதா தலைமை வகித்தார். தேனி வேளாண் விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பெரியகுளம் துணைப் பதிவாளர் செல்வராஜ் போட்டிகளை துவக்கி வைத்தார். தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், வாலிபால், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. 400மீ ஆண்கள் தொடர் ஓட்டம் ஆண்கள் பிரிவில் 32 பேர் பங்கேற்றனர். அதில் நான்கு அணிகள் வெற்றி பெற்றன. முதலிடத்தை பால்பாண்டி தலைமையிலான அணி வென்றது. 2ம் இடத்தை அருள்மணி தலைமையிலான அணி வென்றது. 400 மீ.,பெண்கள் தொடர் ஓட்டம் பெண்கள் பிரிவில் முதலிடத்தை பிரியங்கா தலைமையிலான அணியும், 2ம் இடத்தை தேவப்பிரியா ஹபுபுனிஷா, ரதிபிரபா பெற்றனர். குண்டு எறிதல் (ஆண்கள் பிரிவு) கவியரசன் 8.54 மீட்டர் துாரம் எறிந்து முதலிடம் பிடித்தார். ராஜபிரவீன் 8.26 மீட்டர் துாரம் எறிந்து 2ம் இடம் பெற்றனர். குண்டு எறிதல் (பெண்கள் பிரிவு) மோனிஷா 5.20 மீட்டர் துாரம் எறிந்து முதலிடம் பிடித்தார். பிரியங்கா 5.07 மீட்டர் எறிந்து 2ம் இடம் பிடித்தார். வட்டு எறிதல் (ஆண்கள் பிரிவு) சேதுராமன் 19.73 மீட்டர் துாரம் எறிந்து முதலிடம் பிடித்தார். விக்னேஷ்வரன் 18.45 மீட்டர் துாரம் எறிந்து இரண்டா மிடம் பெற்றார். வட்டு எறிதல் (பெண்கள் பிரிவு) பிரியங்கா 12.40 மீட்டர் துாரம் எறிந்து முதலிடமும், சரஸ்வதி 11.60 மீட்டர் துாரம் எறிந்து 2ம் இடம் பெற்றனர். இதுதவிர மகளிர் மட்டும் பங்கேற்ற எறிபந்து போட்டியும், இருபாலருக்கான வாலிபால்,கபடிப் போட்டிகள் நடந்தன. போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு கூட்டுறவு வார விழாவில் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட உள்ளனர்.