உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சர்வே பணிக்கு லஞ்சம் கேட்பதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்

சர்வே பணிக்கு லஞ்சம் கேட்பதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்

தேனி: தேனி நகராட்சி கூட்டத்தில் சர்வே பணிக்கு லஞ்சம் கேட்பதாக காங்கிரஸ் கவுன்சிலர் நாகராஜ் புகார் கூறினார். தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம் தலைவர் ரேணுப்பிரியா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் செல்வம், நிர்வாக அலுவலர் வெங்கடாசலம், நகர்நல அலுவலர் டாக்டர் கவிப்பிரியா, கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: நாகராஜ், காங்.,: சர்வே பணிகள் மேற்கொள்ள மனு வழங்கினால் நகராட்சி சர்வேயர் வருவதில்லை. தலைவர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வழங்க வேண்டும் என லஞ்சம் கேட்கிறார். தலைவர்: கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ராஜ்குமார், தி.மு.க.,: சிவராம் நகர்பகுதியில் தனிநபர் எதிர்ப்பால் சாக்கடை கட்டுமான பணிபாதியில் நிறுத்தி உள்ளனர். விரைவில் துவங்க வேண்டும். கிருஷ்ணபிரபா, அ.தி.மு.க.,: நகர்பகுதியில் மதுரைரோடு ரயில்வேகேட் அருகே, மட்டன்ஸ்டால் தெருவில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் எரியவில்லை துாய்மைப்பணியாளர்கள் குடியிருப்பருகே உள்ள அங்கன்வாடிமையத்தை புதிதாக கட்டித்தர வேண்டும். லதா : கட்டுமான அனுமதி இன்றி நடக்கும் கட்டங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டம் நிறைவடைந்ததாக தலைவர் அறிவித்தார். அப்போது 8 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் பாப்பா உறுப்பினர்கள் அனைவரது கருத்துக்களை கேட்காமல் கூட்டத்தை ஏன் முடிக்கிறீர்கள் என்றார். 9வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மணிகண்டன் முந்தைய கூட்டங்களில் கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளிக்காததை கண்டிக்கிறோம் என்றார். நகராட்சி பகுதிகளில் சுகாதாரப்பணிகளை முறையாக மேற்கொள் ளாத தனியார் பணி உத்தரவை ரத்து செய்தும், , அம்மா உணவகத்திற்கு ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கணவர்கள் தனி கூட்டம் நகராட்சி கூட்டத்திற்கு வந்த பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் கூட்டரங்களில் பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மொத்தமாக அமர்ந்திருந்தனர். கூட்டம் ஒரு பக்கம் நடக்க இவர்கள் நகராட்சியில் நடப்பவை பற்றி சத்தமாக பேசி தனிக்கூட்டம் போல் நடத்தினர். இதனால் மற்ற பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி