உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் சைபர் கிரைம் போலீசார் வழிப்புணர்வு

கல்லுாரியில் சைபர் கிரைம் போலீசார் வழிப்புணர்வு

தேனி: வீரபாண்டி சவுராஷ்டிரா கலை, அறிவியல் கல்லுாரியில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், யாரும் பணம் கொடுத்து விலைக்கு கேட்டால் தங்கள் வங்கி கணக்கு புத்தகங்கள், அதனுடன் தொடர்புடைய சிம்கார்டுகள், இதர வங்கி ஆவணங்களை வழங்க கூடாது. இவ்வாறு வழங்குபவர்கள் குற்ற வழக்குகளில் சிக்க நேரிடம். மாணவர்கள் இதனை தங்கள் பெற்றோர்,உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் இணைய வழி லிங்குகளை திறப்பது ஆபத்தில் சிக்க வைக்கும். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் முன் நிறுவனம் பற்றி முழுவதும் அறிந்து கொள்ள வேண்டும். என்றார். கல்லுாரி முதல்வர் கனகராஜ் முன்னிலை வகித்தார். எஸ்.ஐ., அழகு பாண்டி, பேராசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை