உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் ஈட்டலாம் என ரூ.5 கோடி மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் ஈட்டலாம் என ரூ.5 கோடி மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை

தேனி: தேனியில் கடந்த ஓராண்டில் ஆன்லைன் டிரேடிங் செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாக கூறி 125 பேரிடம் ரூ.5 கோடி மோசடி செய்தது சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஓராண்டில் ஆன்லைன் டிரேடிங் மோசடியில் பணத்தை இழந்து சைபர் கிரைம் போலீசில் 125 பேர் புகார் அளித்துள்ளனர். இதுபற்றி எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் கூறியதாவது: முகநுால், வாட்ஸ் ஆப் செயலிகளில் வங்கி கணக்கு எண் விற்று லாபம் ஈட்டலாம் என விளம்பரம் செய்கின்றனர். இதில் வங்கி கணக்கு எண்ணை விற்கும் நபருக்கு ஒரு லட்சத்திற்கு ரூ.ஆயிரம் கமிஷன் வழங்கப்படும் என பேசி, வங்கிக் கணக்கு எண்ணை பெற்று அதனை மூலதனமாக வைத்து, ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் ஈட்டித்தருவதாக மோசடி செய்கின்றனர். சைபர் கிரைம் போலீசில் ஓராண்டில்125 புகார்கள் பெறப்பட்டு, ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்ஸாண்டர், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆலோசனையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில்பாதிக்கப்பட்டவர்கள் ரூ.5 கோடி வரை பணத்தை இழந்துள்ளனர். முதலில் வாட்ஸ் ஆப், முகநுாலில், ஆன்லைன் டிரேடிங்கிற்கு வலை விரிக்கும் நபர்கள் ஏற்கனவே விலைக்கு வாங்கிய வங்கிக் கணக்கு மூலம் தங்களிடம் சிக்கும் வாடிக்கையாளர்களிடம் ஆன்லைனில் டிரேடிங் செய்வதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆன்லைன் டிரேடிங் என முகநுால், வாட்ஸ்ஆப் செயலிகளில் வரும் விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை