உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடன் வழங்கும் ஏழு செயலிகளை பிளே ஸ்டோரில் நீக்க  பரிந்துரை; பொது மக்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை

கடன் வழங்கும் ஏழு செயலிகளை பிளே ஸ்டோரில் நீக்க  பரிந்துரை; பொது மக்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை

தேனி : ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் 7 செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குவதற்கு சைபர் கிரைம் போலீசார் பரிந்துரைத்து செய்துள்ளனர். இந்த செயலிகளை பொது மக்கள் பயன்படுத்த வேண்டாம்,'என எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் அலைபேசி செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து ஆதார், வங்கிக் கணக்கு, பான் கார்டு, புகைப்படங்கள் பதிவேற்றம் செய்து கடன் பெறுகின்றனர். இவர்களில் மாதத்தவணை செலுத்த தவறியவர்கள், முறையாக செலுத்துபவர்களின் அனைத்து விபரங்களையும் பெறும் ஆன்லைன் நிறுவனங்கள், அவற்றை பயன்படுத்தி கடன் பெற்றவர்களின் உறவினர்களின் அலைபேசி எண்களுக்கு, கடன் வாங்கியவரின் போட்டோவை மார்பிங் தொழில் ஆபாச புகைப்படங்களுடன் இணைத்து உறவினர்களின் எண்கள், மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி விடுகின்றனர். இந்த விபரங்களை அறிந்த உறவினர்கள், கடன்பெற்றவரை தொடர்பு கொண்டு கேட்கும் போது மன உளைச்சலுக்கு ஆளாகி அதனை நீக்குவதற்காக கடன் வழங்கிய நிறுவனங்களை தொடர்பு கொள்கின்றனர். அப்போது கடன் வழங்கிய தொகையை காட்டிலும் கூடுதல் பணம் வேண்டும் என மிரட்டி மோசடி செய்கின்றனர். இம்மாதிரியான மோசடிகளில் தேனி மாவட்டத்தில் 2025 ஜனவரி 1 முதல் தற்போது வரை 168 பேர் பாதித்து புகார் அளித்துள்ளனர். இதனை விசாரித்து வரும் தேனி சைபர் கிரைம் போலீசார், கேஸ் ரூபி (Cash Rupee), கிரிடிட் கிஷாப் (Credit Hisab), குயிக் கேஸ் (Quick cash), குயிக் கிரிடிட் (Quick Credit), ரூபி ப்ரி (Rupee Free), ரூபி பார்ட்னர் ( Rupee Partner), கிளியர் கிரிடிட் (Clear Credit), கிரிடிட் கேஸ் (Credit Cash) உள்ளிட்ட கடன் வழங்கும் நிறுவனங்களின் ஏ.பி.கே., அப்ளிகேஷன் செயலிகளை, தேனி எஸ்.பி., மாநில சைபர் கிரைம் கூடுதல் டி,ஜி.பி., வழிகாட்டுதலில் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி