உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சேதமடைந்த சமுதாயக்கூடம்

சேதமடைந்த சமுதாயக்கூடம்

தேவாரம்: தேவாரம் அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் சமுதாய கூடம் உரிய பராமரிப்பு இன்றி சேதம் அடைந்து உள்ளதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.சின்னமனுார் ஒன்றியம் பொட்டிப்புரம் ஊராட்சிக்கு உட்பட்டது ராமகிருஷ்ணாபுரம். இந்த உட்கடை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ராமகிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டில் எம்.பி., தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் குடிநீர், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. தற்போது உரிய பராமரிப்பு இல்லாததால் சமுதாய கட்டடம் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து உள்ளது. மின் விசிறி, தளவாடப் பொருட்கள் உடைந்து பயன்பாடு இன்றி காட்சிப் பொருளாகவே உள்ளன.பகலில் மது அருந்தும் பாராகவும், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாகவும் மாறி உள்ளது. மக்களுக்கு பயன்படும் வகையில் சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சின்னமனுார் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி