உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோட்டில் கிடக்கும் மின் கம்பத்தால் ஆபத்து

ரோட்டில் கிடக்கும் மின் கம்பத்தால் ஆபத்து

போடி : போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் மெயின் ரோட்டில் ஆபத்தான நிலையில் விழுந்துள்ள மின் கம்பத்தை அகற்றாததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.நெடுஞ்சாலைத்துறை மூலம் ஏழு மாதங்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.59 கோடி செலவில் மேலச்சொக்கநாதபுரத்தில் இருந்து தேவாரம் மெயின் ரோடு வரை ரோட்டின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள், மின்கம்பங்கள் அகற்றப்பட்டன. ஒரு கி.மீ., தூரம் ரோடு, மழைநீர், வடிகால், தடுப்புச்சுவர், பாலங்கள் கட்டப்பட்டன. மின் கம்பத்தை முழுவதும் அகற்றாததால் ஆபத்தான நிலையில் மின் கம்பம் ரோட்டில் கிடக்கிறது. இதனால் இரவில் விழுந்து கிடக்கும் மின்கம்பம் தெரியாத நிலையில் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றன.விழுந்து கிடக்கும் மின் கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி