உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்

ஆண்டிபட்டி : ஆசாரிபட்டி மெயின் ரோடு அருகே குடியிருப்பு பகுதியில் மும்முனை மின் கம்பிகளை தாங்கி செல்லும் மின் கம்பம் சேதமடைந்து சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மின் கம்பத்தின் மூன்று பக்கமும் மும்முனை மின் கம்பிகள் செல்கின்றன. மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்துள்ளதால் எப்போது கீழே விழும் என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் உள்ளனர். காற்று, மழை காலங்களில் மின் கம்பிகள் உரசுவதால் தீப்பொறி ஏற்படுவதுடன் இப்பகுதியில் மின் வினியோகம் அடிக்கடி தடைபடுகிறது. சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை