மகள் மாயம் : தந்தை புகார்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் இவரது மகள் சுகன்யா 25, என்பவருக்கும், மதுரை ஆனையூரைச் சேர்ந்த விவேக் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்தது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த ஒரு ஆண்டாக தந்தை தமிழரசன் வீட்டில் சுகன்யா வசித்து வந்தார்.ஜூன் 28ல் தனியார் கம்பெனிக்கு வேலை கேட்க செல்வதாக கூறி வெளியில் சென்றவர் மாலையில் போன் மூலம் தன்னை தேட வேண்டாம் என்று கூறி, மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். உறவினர் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழரசன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.