உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரயில் பாதை கோரி அமைச்சரை சந்திக்க முடிவு

ரயில் பாதை கோரி அமைச்சரை சந்திக்க முடிவு

தேனி: திண்டுக்கல் -குமுளி அகலரயில்பாதை திட்ட போராட்டக்குழு, தேனி மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் கண்ணுச்சாமி, அந்தோணி பிரான்சிஸ், மனோகரன், மகாராஜன், ஜான்சன், காமராஜ், ராமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திண்டுக்கல் லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக டில்லி சென்று மத்திய ரயில்வே அமைச்சர், அதிகாரிகளை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை