மேலும் செய்திகள்
2ம் நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்
27-Sep-2025
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை நகராட்சி அதிகாரில் விரைவில் துவங்க உள்ளனர். நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தேனி நகர் பகுதியில் பல தெருக்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. சிலர் சாக்கடைகள், ரோட்டை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் சாக்கடை துார்வாருதல் உள்ளிட்ட பணிகள், அவசர காலங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலை உள்ளது. ஒரு தெருவினை எடுத்துக்கொண்டால் துவக்கம் முதல் முடிவு வரை ரோட்டின் அளவை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி செய்ய உள்ளோம். இதற்காக கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் ஆக்கிரமிப்பில் வீட்டுப் படிகள், சுற்றுச் சுவர்கள் அமைத்துள்ளனர். அவையும் அகற்றப்படும் என்றனர்.
27-Sep-2025