மேலும் செய்திகள்
சோஷியல் மீடியாவில் கட்டுப்பாடுகள் தேவை!
08-Nov-2024
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ.21 லட்சம் மதிப்பில் பூ க்கடைகள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் நகராட்சி வணிக வளாகத்தில் பூமார்க்கெட் செயல்பட்டு வந்தது. தேனி சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் கடந்தாண்டு ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது வணிகவளாகத்தின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. அதில் பூமார்க்கெட்டும் அகற்றப்பட்டது. அதில் சில கடைகள் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் செயல்படுகின்றன. சில கடைகள் சுப்பன்செட்டி தெருவில் செயல்படுகின்றன. இந்நிலையில் நகராட்சி சார்பில் கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் ரூ.21 லட்சம் செலவில் 40 பூக்கடைகள் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
08-Nov-2024