உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மான் வேட்டையாடியவர் கைது

மான் வேட்டையாடியவர் கைது

கூடலுார்: கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மான் வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர்.கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை சுரங்கனாறு காப்புக்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் விளை நிலங்களில் மான் வேட்டையாடப் படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கம்பம் மேற்கு ரேஞ்சர் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அங்கு மானை வேட்டையாடி இறைச்சியை வைத்திருந்த கூடலுாரைச் சேர்ந்த ராஜபிரபுவை கைது செய்தனர். அவரிடமிருந்த மான் இறைச்சியை கைப்பற்றினர். வேட்டையாட இவருக்கு உதவியாக இருந்த மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி