உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோடை நெல் சாகுபடியில் டிராக்டர் உழவுக்கு கிராக்கி

கோடை நெல் சாகுபடியில் டிராக்டர் உழவுக்கு கிராக்கி

பெரியகுளம்; பெரியகுளம் வட்டாரத்தில் நெல்சாகுபடியில் டிராக்டர் உழவுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.பெரியகுளம், கீழ வடகரை, தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, குள்ளப்புரம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய பகுதி நஞ்சை நிலங்களில் தற்போது முதல் போகம் கோடை உழவு 5 ஆயிரம் ஏக்கரில் உழவுப்பணி நடந்து வருகிறது.தாமரைக்குளம் ஆயக்கட்டு பகுதியில் 400 ஏக்கரில் டிராக்டர் உழவுப்பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு மணி நேரம் டிராக்டர் உழவுக்கு டீசல், டிரைவர் பேட்டா உட்பட ரூ.900 வாங்கப்படுகிறது.டிரைவர் அன்புச்செல்வன் கூறுகையில்: சித்திரை மாதம் துவக்கத்திலிருந்து தினமும் 8 முதல் 10 மணி நேரம் உழப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த மாதம் புக்கிங் அதிகளவில் உள்ளது. டீசல் செலவு, டிராக்டர் பராமரிப்பு செலவு போக, உழைப்புக்கு ஏற்ற சம்பளமாக மாதம் ரூ.1 லட்சம் கிடைக்கும். ஆண்டுகளுக்கு மூன்று மாதம் இம்மாதிரியான வேலை இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி