ஆக்கிரமிப்பால் சுருங்கிய பஜார் வீதி பெரியகுளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
பெரியகுளம்: பெரியகுளம் மூன்றாந்தல் பஜார் வீதியில் இருபுறம் கடை நடத்துவோர், தற்காலி கடைகளை அமைத்து ஆக்கிரமிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரியகுளம் மூன்றாந்தல் பஜார்வீதி காந்திசிலை அருகே துவங்கி ஒரு கி.மீ., தூரம் வரதராஜப் பெருமாள் கோயில் அருகே முடிகிறது. பஜார் வீதியில் பழக்கடை, சுவீட், நகை, காஸ் ஏஜன்சி, ஜவுளி, மளிகை கடைகள், கவுமாரியம்மன், திரவுபதியம்மன், வரதராஜப் பெருமாள் கோயில்கள் உள்ளன. மார்க்கெட், பள்ளிவாசல் இணைப்பு ரோடாக உள்ளது. பெரியகுளத்தின் முக்கிய வியாபார மையமாக உள்ளது. இந்தப்பகுதி வழியாக முன்பு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்லும். சில ஆண்டுகளுக்கு முன்பு இரவில் மதுரையிலிருந்து பெரியகுளம் வரும் பஸ்கள் பஜார்வீதி வழியாக பயணிகளை இறக்கிவிட்டு செல்லும் பஸ், வேன்கள் வந்து செல்லும் அளவிற்கு ரோடு இடையூறு இன்று அலகமாக இருந்தது. ஊர்ந்து செல்லும் டூவீலர்கள்
தற்போது இருபுறமும் உள்ள கடைக்காரர்கள் முன்பக்கம் ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். அதற்கு அருகே தற்காலிக தள்ளுவண்டி கடைகள் ரோட்டை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து, தற்போது டூவீலரில் செல்வதற்கே சிரமமாக உள்ளது. இந்த நிலையில் கடைகளுக்கு சரக்கு இறக்கும் லாரிகள்,பீக் ஹவர்சில் ரோட்டை மறைத்து லாரியை நிறுத்தி சரக்கு ஏற்றி இறக்குவது மேலும் நெரிசலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மூன்றாந்தல் காந்திசிலை நுழைவு பகுதியில் இருந்து மாரியம்மன் கோயில் வரை டூவீலர்கள், பாதசாரிகள் வளைந்து, நெளித்து, ஊர்ந்து செல்லும் வகையில் ஆக்கிரமிப்பாளர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. டி.எ ஸ்.பி., கவனம் செலுத்த வேண்டும்
பஜாரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை டிராபிக் போலீசார் கண்டு கொள்வது இல்லை. மேலும் பஜார்வீதி நுழைவு பகுதியில் போக்குவரத்து போலீஸ் கண்காணிப்பு அறை உள்ளது. இதில் போக்குவரத்து போலீசார் உட்கார்ந்து போக்குவரத்தினை சீரமைப்பதில்லை. முந்தைய டி.எஸ்.பி., க்கள் பலரும் தினமும் ஜீப்பில் பஜார்வீதி வழியாக ரோந்து செல்வார்கள். இதனால் ஆக்கிரமிப்பு இல்லை.நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாகும்.