உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையில்லா அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக்குழுவின் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களையும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்திட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை அமைப்பாளர் லட்சுமிவாசன் தலைமை வகித்தார்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். செயலாளர் செல்வம், துணை செயலாளர் துரைவேணுகோபால், பொருளாளர் சரவணக்குமார் பங்கேற்றனர். பின் நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு, கையெழுத்து பிரதிகளை வழங்கினர். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கலெக்டர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ