உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் செயல் விளக்கம்

விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் செயல் விளக்கம்

போடி : போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில் நுட்பக் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவிகள் சார்பில் கிராமப்புற விவசாய பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிப்பு செயல்முறை விளக்கம் நடந்தது. மண்ணின் தன்மை மாறாமல், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அட்ரஸின் மருந்து கொண்டு ட்ரோன் மூலம் மக்காச்சோளம் பயிர்களில் களைக் கொல்லி தெளிப்பு செயல் முறை விளக்கத்தை விவசாயிகளுக்கு மாணவிகள் செய்து காண்பித்தனர். மாணவிகள் கிருத்திகா பானு, கீர்த்தனா சாய், ஞானலேஷி, அழகி, அகத்தியா, ஜெயஹரிணி, ஜெனி ரோஸ், நிவிதா, பிருந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை