மேலும் செய்திகள்
டூ - வீலரை சத்தமாக ஓட்டிய சிறுவனின் உறவினர் கைது
01-Nov-2024
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து மின் விளக்குகள் பழுதால் மருத்துவமனை இருளில் தவிக்கிறது.தேவதானப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவதானப்பட்டி அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காய்ச்சல், பிரசவம், விபத்து முதலுதவி சிகிச்சை உட்பட பல்வேறு நோய்களுக்கு தினமும் 200 க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.வட்டார மருத்துவமனையில் 24 மணி நேரம் சிகிச்சை என்பதால் இரவிலும் தினமும் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 10 மின் விளக்குகள் இருந்தது. இதனை தேவதானப்பட்டி பேரூராட்சி பராமரித்தது. கடந்த மாதம் 6 மின் விளக்கு எரியவில்லை. இதனை தொடர்ந்து சில தினங்களாக பெய்த மழையில் அனைத்து விளக்குகளும் பழுதாகி கும்மிருட்டாக உள்ளது.இரவில் வரும் நோயாளிகளை உறவினர்கள் டார்ச் விளக்கு உதவியுடன் அழைத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் பழுதான மின் விளக்குகளை அகற்றி தரமான மின் விளக்குளை பொருத்த வேண்டும்.-
01-Nov-2024