மரக்கிளை விழுந்து பக்தர் படுகாயம்
சபரிமலை: சபரிமலையில் நேற்று மாலை தரிசனம் முடிந்து பக்தர்கள் பம்பைக்கு திரும்பி கொண்டிருந்தனர். சந்திராங்கதன் ரோட்டில் கர்நாடக மாநிலம் மாண்டியா பாண்டவபுரம் சஞ்சு 29, நடந்து சென்ற போது மரக்கிளை ஒடிந்து தலையில் விழுந்தது. அவர் காயமடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் பம்பை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் கோட்டயம் மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பப்பட்டார்.* திருவனந்தபுரம் அருகே பனையர் ஜெயச்சந்திரன் 54. இவர் சன்னிதானம் அரவணை கவுண்டரில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அவர் அப்பகுதியில் சென்ற போது காட்டுப்பன்றி தாக்கி காயமுற்றார். அவருக்கு 14 தையல் போடப்பட்டது.