உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் மண்டல பூஜை

தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் மண்டல பூஜை

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி நன்மை தருவார்கள் ஐயப்ப சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்திற்கு பின் 48ம் நாள் மண்டல பூஜை விழா நடந்தது. இக்கோயில் வளாகத்தில் உள்ள 49 அடி உயர சர்வ சக்தி மாகாளி அம்மனுக்கு பாலாபிஷேகம், பூச்சொரிதல் மற்றும் புதிதாக நிறுவப்பட்ட 21 அடி உயர குதிரை மேல் இருக்கும் அய்யனார், பத்ரகாளியம்மன், குபேர வாராஹி அம்மன், கவுமாரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு டிசம்பர் 28ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விசேஷ பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் பவுர்ணமி பூஜையுடன் 48 வது நாள் மண்டல பூஜையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் முத்துவன்னியன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை