மேலும் செய்திகள்
விவசாயிகளை தேடிச் செல்லும் மண் பரிசோதனை வாகனம்
31-May-2025
கம்பம்: தொடர் மழையால் இந்தாண்டிற்கான மண் மாதிரிகள் எடுக்க முடியாமல் வேளாண் , தோட்டக்கலைத்துறையினர் திணறி வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வேளாண் மற்றும் தோட்டக் கலைத்துறையினர் மண் பரிசோதனை செய்வது வழக்கம். இதற்கென தங்கள் பகுதியில் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுப்பார்கள். இந்தாண்டு கம்பத்திற்கு 400, சின்னமனூருக்கு 600, கடமலைக்குண்டு விற்கு 800 என தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரத்திற்கும் மண் மாதிரிகள் எடுக்க வேளாண் இயக்குனரகம் இலக்கு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.மண் மாதிரிகளை பரிசோதனை செய்து அதன் முடிவின் அடிப்படையில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில் நுட்பங்கள் வழங்கப்படும். மேலும் என்ன பயிர் சாகுபடி செய்யலாம், மண்ணில் எந்த சத்து குறைவாக உள்ளது, எது அதிகமாக உள்ளது என்பதையும் தெரிந்து விவசாயிகளுக்கு தெரிவிப்பார்கள்.ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இந்த மண் மாதிரிகள் எடுக்கும் பணி மேற்கொள்ளப்படும். மே மாதம் வெயில் காலத்தில் மாதிரிகள் எளிதாக எடுப்பார்கள். ஆனால் இந்தாண்டு மே மாதம் மழை பெய்து கொண்டிருந்ததால் மண் மாதிரிகள் சேகரிப்பது இயலவில்லை. இதற்கு காரணம் நிலம் ஈரமாக இருப்பதால், மண் மாதிரிகள் எடுக்க முடியாது . எனவே இலக்கை எட்ட என்ன செய்வதென்று தெரியாமல் அலுவலர்கள் திணறி வருகின்றனர்.இது குறித்து வேளாண்,தோட்டக்கலைத் துறையினர் கூறுகையில் மழை பெய்வதால் மண் மாதிரி எடுக்க முடியவில்லை. ஈரப்பதம் இல்லாத இடங்களில் சேகரம் செய்து , அலுவலகத்தில் மண்ணை காய வைத்து வருகின்றோம். இருந்தாலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், இலக்கை எட்டுவது சிரமம் தான் ,'என்கின்றனர்.
31-May-2025