உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீசாருக்கு டிவிடெண்ட் வழங்கல் தினமலர் செய்தி எதிரொலி

போலீசாருக்கு டிவிடெண்ட் வழங்கல் தினமலர் செய்தி எதிரொலி

பெரியகுளம்: காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க உறுப்பினர்களுக்கு நேற்று முதல் டிவிடெண்ட் பணம் வழங்கப்படுவதால் போலீசார் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஐந்து போலீஸ் சப்- டிவிஷன்களுக்கு உட்பட்ட 31 போலீஸ் ஸ்டேஷன்கள், ஆறு புறக்காவல் நிலையங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் முதல் இன்ஸ்பெக்டர் வரை தேனி என்.ஆர்.டி., நகரில் செயல்படும் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 700க்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் வீடு கட்டுவதற்கு சம்பளத்துக்கு ஏற்ப ரூ. 5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. கடன் வழங்கும் தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்து, கடன் முடியும் தருவாயில் அசலில் வரவு வைத்து கணக்கு நேர் செய்யப்படும்.கடன் தவணையை சம்பளத்தில் பிடித்தம் செய்து வரவு வைப்பதால் வங்கி லாபகரமாக இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு இச்சங்கம் ரூ1.10 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு டிவிடெண்ட் ஆக உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இதில் ரூ. 7000 முதல் ரூ.25ஆயிரம் வரை ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். இந்த ஆண்டு டிவிடெண்ட் வழங்குவது தாமதம் குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று முதல் டிவிடெண்ட் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் போலீசார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ