உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திண்டுக்கல்- - குமுளி நெடுஞ்சாலை ஓரங்களை சீரமைக்க வேண்டும் சபரிமலை சீசனுக்கு முன் நடவடிக்கை தேவை

திண்டுக்கல்- - குமுளி நெடுஞ்சாலை ஓரங்களை சீரமைக்க வேண்டும் சபரிமலை சீசனுக்கு முன் நடவடிக்கை தேவை

தேனி: சபரிமலை சீசன் துவங்கும் முன் மாவட்டதின் வழியாக செல்லும் திண்டுக்கல்- - -குமுளி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சபரிமலை மண்டலபூஜை நவ.,16ல் துவங்குகிறது. மண்டல பூஜை மகரவிளக்கு காலங்களில் தேனி மாவட்டம் வழியாக திண்டுக்கல்- - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவிலான ஐயப்ப பக்தர்கள் சென்று திரும்புவார்கள். ஆனால், இந்த நெடுஞ்சாலையில் பல இடங்களில் ரோட்டோர பள்ளங்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இது தவிர ரோட்டோரங்களை புற்கள், மணல் மேவி உள்ளன. இதனால் ரோட்டோரத்தில் டூவீலர்களில் செல்பவர்களும் தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. எதிரொலிப்பான்கள் இல்லை இருபுறமும் ரோடு முடிவுகளை குறிக்கும் வகையில் பல இடங்களில் சிறிய சிமென்ட் துாண்கள் வரிசையாக வைக்கப் பட்டுள்ளன. அவற்றில் எதிரொலிப்பு தன்மையுள்ள ஸ்டிக்கர்கள் இல்லை. இதனால் ரோட்டோரங்கள் தெரியாமல் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் விபத்துக்களை தடுக்கம் வகையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ