உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மண்டல கூடைப்பந்து போட்டியில் திண்டுக்கல் மாணவிகள்  அசத்தல் 

மண்டல கூடைப்பந்து போட்டியில் திண்டுக்கல் மாணவிகள்  அசத்தல் 

தேனி: தேனியில் நடந்த, மதுரை மண்டல அளவிலான கூடைப்பந்து அணி தேர்வு போட்டியில் திண்டுக்கல் மாணவிகள் 13 பேர் தேர்வாகினர். தேசிய அளவில் இந்திய பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு குழும போட்டிகள் (SGFI) நடத்தப்படுகின்றன. மாணவர்கள், மாணவிகள் பிரிவில் 14, 17, 19 வயதிற்கு உட்பட்டு நடத்தப்படுகிறது. மதுரை மண்டல அளவிலான மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். 14 வயது பிரிவில் திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜனனிஸ்ரீ, மித்ரா, பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கனிஸ்கா, ஹேமன்யா, ஜெசிகிறிஸ்டி, கம்பம் ஸ்ரீசக்தி விநாயகா மெட்ரிக் பள்ளி மாணவி சன்ஷிகாஸ்ரீ தேர்வாகினர். 17 வயது பிரிவில் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., பள்ளி மாணவிகள் தாரிகாஸ்ரீ, பிரதிக்ஷா, ஹரிஜாமாலினி, மனிஷாஸ்ரீ, திண்டுக்கல் அங்குவிலாஸ் பள்ளி மாணவி இளந்தென்றல், பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அபினயாஸ்ரீ தேர்வாகினர். 19 வயது பிரிவில் சிவகங்கை மன்னார் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஆர்த்திசஹானா, மதியரசி, திண்டுக்கல் அங்குவிலாஸ் பள்ளி மாணவிகள் துர்கா, பிருதுலா, என்.எஸ்.வி.வி., பள்ளி மாணவி பிரியாமகாலட்சுமி, மதுரை வண்டியூர் போஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஹரினி மண்டல அணிக்கு தேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை