மேலும் செய்திகள்
மாவட்ட தொடர் கிரிக்கெட்
23-Jun-2025
தேனி :தமிழ்நாடு கிரிக்கெட் அசோஷியேஷன், தேனி மாவட்ட கிரிக்கெட் அசோஷியேசன் இணைந்து நடந்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.போட்டிகள் தேனி ஆயுதப்படை மைதானம், கம்மவார் கல்லுாரி மைதானம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மைதானம், சின்னமனுார் விகாஷா பள்ளி மைதானங்களில் நடந்து வருகிறது.காஸ்மோ கிரிக்கெட் கிளப், ஜாக்கி கிரிக்கெட் கிளப் அணிகளள் மோதிய போட்டியில் காஸ்மோ கிளப் அணி 35 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. ஜாக்கி கிளப் அணி 19.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பி.ஆர்.பி.சி.சி., அணி, சைலண்ட் வாரியர்ஸ் மோதிய போட்டியில் சைலண்ட் வாரியர்ஸ் அணி 23 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. சேசிங் செய்த பி.ஆர்.பி., சி.சி அணி 14 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்த வெற்றி பெற்றது.
23-Jun-2025