உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

கம்பம்: வேலப்பர் கோயிலில் கந்த சஷ்டி விழாவினை தொடர்ந்து திருவிளக்கு பூஜை, பால் குட ஊர்வலம் நடந்தது. முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேற்று முருகப் பெருமான், வள்ளி தெய்வானை கழுத்தில் மங்கள நாண் சூடி திருக்கல்யாணம் நடந்தது. கம்பராயப் பெருமாள் கோயிலில் உள்ள சண்முகநாதர் கோயிலிலும் முருகப்பெருமானுக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. உத்தபாளையம் காளாத்தீஸ்வரர்,ஞானம்பிகை கோயில், சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் சிவகாமியம்மன் கோயில்களிலும் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் கோயில்களில் நடந்த அன்னதானத்தில் பங்கேற்று தங்களது விரதத்தை நிறைவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை