உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மத்திய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 மத்திய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கம்பம்: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கிய மத்திய அரசை கண்டித்து நகர் ஒன்றியங்களில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது. கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சின்னமனூரில் எம்.எல். ஏ., ராமகிருஷ்ணன், உத்தமபாளையத்தில் கொள்கை பரப்பு துணை செயலாளர் பாண்டியன் , கம்பத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆசையன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. காங்., இடதுசாரிகள், வி. சி.க., இ.மு.லீக், த.மு.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பெரியகுளம்: ஜெயமங்கலம் ஊராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சரவணக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். பெரியகுளம் தொகுதி பொறுப்பாளர் முத்துராமலிங்கம், வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகர செயலாளர் முகமது இலியாஸ், வி.சி., கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ரபீக், ஒன்றிய செயலாளர் ஆண்டி, மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் ஐயப்பன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். போடி: சில்லமரத்துப்பட்டியில் தி.மு.க., தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். போடி மேற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தனர். மாவட்ட காங்., துணைத் தலைவர் சன்னாசி, வட்டார தலைவர் கண்ணன், போடி நகர தலைவர் முசாக்மந்திரி, இ.கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள், மா.கம்யூ., தாலுகா செயலாளர் முனீஸ்வரன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், போடி நகர செயலாளர் ஆரோ செல்வன், வி.சி.க., மாவட்ட செயலாளர் மதன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆண்டிபட்டி: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்னாள் எம்.பி., செல்வேந்திரன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., மகாராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர் செயலாளர் சரவணன் மற்றும் காங்., வி.சி.க., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., ம.தி.மு.க., உட்பட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., மாநில தீர்மானக் குழு உறுப்பினர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை