மேலும் செய்திகள்
சோழவந்தானில் மருது பாண்டியர் குருபூஜை
28-Oct-2024
தேனி: தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நவ.27ல் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாடட்டம் குறித்து ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம் தேனியில் ஓட்டலில் நடந்தது. அவைத் தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். பெரியகுளம் தொகுதி பொறுப்பாளர் முத்துராமலிங்கம்,சரவணக்குமார் எம்.எல்.ஏ., தேனி நகரச் செயலாளர் நாராயணபாண்டியன், முன்னாள் , நகரச் செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ் செல்வன் பேசினார். உதயநிதி பிறந்த நாளையொட்டி ரேக்ளா ரேஸ், நலத்திட்ட உதவிகள் வழங்குவது, போடி அரசு மருத்துவமனையில் நவ.27 பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
28-Oct-2024