உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளி அருவியில் இன்று நாய் கண்காட்சி

சுருளி அருவியில் இன்று நாய் கண்காட்சி

கம்பம்: சுருளி அருவியில் ஆண்டுதோறும் சாரல் விழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. இந்தாண்டு இன்றும் ( செப். 27 ) , நாளையும் நடைபெறுகிறது. சாரல் விழாவில் அனைவரையும் கவரும் நிகழ்ச்சியாக நாய் கண்காட்சி இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் நாட்டு நாய்கள் வெளிநாட்டு இனங்கள் என தனித் தனியாக நடத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் தலா 3 பரிசுகள் வீதம் வழங்கப்படுகிறது. பங்கேற்கும் நாய்களுக்கு பெல்ட், உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும், நாய் வளர்ப்பவர்கள் கண்காட்சியில் தங்களின் செல்லப்பிராணிகளை காட்சிப்படுத்தி பரிசுகளை பெற்று செல்ல அழைக்கின்றோம் என கால்நடை பராமரிப்பு துறையின் இணை இயக்குநர் கோயில் ராஜா அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ