உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கும் பணி நாளை துவக்கம்

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கும் பணி நாளை துவக்கம்

தேனி: மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வீடுதேடி வழங்கும் திட்டம் 10 கடைகளில் நாளை முதல் சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகபடுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் மாவட்டத்தில் 45 ஆயிரம் பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாளை(ஆக.,2) 10 ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் சுமார் 960 பேர் பயனடைவார்கள் இத்திட்டத்தில் தாலுகா வாரியாக பெரியகுளத்தில் எருமலைநாயக்கன்பட்டி, தென்கரை, ஆண்டிபட்டியில் கொண்டமநாயக்கன்பட்டி, போடிதாசன்பட்டி, உத்தமபாளையம் வெள்ளையம்மாள்புரம், கம்பம் சின்னஓவலாபுரம், கூடலுாரில் ஒரு கடை, போடி கடை எண் 25 சோலையூர், சிறைக்காடு தேனியில் அல்லிநகரம் கடை எண் 10, டி.வி.எஸ்.,ரோடு கடை எண் 6, என 10 கடைகளில் இருந்து வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை