பள்ளி வளாகத்தில் டிரைவர் கொலை?
ஆண்டிப்பட்டி:அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆட்டோ டிரைவர் நிர்வாண நிலையில், உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று காலை உடலில் பலத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் தெப்பம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தங்கமலை, 43, இறந்து கிடந்தார். ராஜதானி போலீசார், சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர். தங்கமலைக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். தவறான தொடர்பு காரணமாக அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.