மேலும் செய்திகள்
மகளிருக்கான இலவச சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
28-Dec-2024
பெரியகுளம் : பெரியகுளம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்,போதை பொருள் ஒழிப்பு, தீமைகள் குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிமன்றம் நீதிபதி சந்திரசேகர் பேசுகையில்,'போதை பொருட்களால் சமுதாயத்தில் அந்தஸ்து குறையும். உடல் ஆரோக்கியம் கெடும். பணம் இழப்பு ஏற்படும். நாளைய வளமான சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் போதை பழக்கம் இல்லாத மாணவர்களாக இருக்க வேண்டும்', என்றார். பெரியகுளம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரத்ராஜா, ரவிக்குமார், வழக்கறிஞர் முத்துக்குமார்,பள்ளி தலைமை ஆசிரியர் சின்னராஜா, தென்கரை எஸ்.ஐ.,செந்தில்குமார், சமூக ஆர்வலர் ராஜ்குமார், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்றனர்.--
28-Dec-2024