உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டீ கடையில் தகராறு போதை வாலிபர் கைது

டீ கடையில் தகராறு போதை வாலிபர் கைது

தேனி : தேனியில் டீக்கடையில் தகராறில் ஈடுபட்டு பொருட்களை உடைத்து, கடை உரிமையாளர் வைகுண்டசாமி, அவரது மனைவி தாழைசுபா ஆகியோரை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த யுவனேஷை 25, போலீசார் கைது செய்தனர். தேனி பங்களாமேடு வைகுண்டசாமி, பாரஸ்ட் ரோடு சந்திப்பில் டீ கடை வைத்துள்ளார். இவரது மனைவி தாழைசுபா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். நேற்று காலை, கடை திறந்த போது வாசற்படியில் அதே பகுதியை சேர்ந்த யுவனேஷ் போதையில் படுத்திருந்தார். அவரை எழுப்பிய போது கடையில் சிறுநீர் கழித்தார். இதனை வைகுண்டசாமி தட்டிக் கேட்டார் அவரை கற்களால் தாக்கி, பொருட்களை உடைத்தார். இதனை ஆசிரியை தாழைசுபா தடுத்தார். அவரையும் யுவனேஷ் தாக்கினார். காயமடைந்த இருவரும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். தாழைசுபா புகாரில் தேனி போலீசார் யுவனேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை