உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அணை நீர் திறப்பு குறைவால் மின் உற்பத்தியும் குறைந்தது

அணை நீர் திறப்பு குறைவால் மின் உற்பத்தியும் குறைந்தது

கூடலுார்:முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் தமிழக பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு, 500 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தியும் குறைந்தது.முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில், சில நாட்களாக மழையில்லை. இதனால் நீர்மட்டம் குறைந்து வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி நீர்மட்டம், 133.30 அடியாக இருந்தது. அணையின் மொத்த உயரம், 152 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 436 கன அடி. நீர் இருப்பு, 5,469 மில்லியன் கன அடியாகும்.மழையின்றி அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதை தொடர்ந்து தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த, 1,500 கன அடி நீர் நேற்று காலையில் இருந்து வினாடிக்கு, 500 கன அடியாக குறைக்கப்பட்டது.நீர்ப்பிடிப்பு பகுதியில் கடும் வெப்பம் நிலவுவதால், நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதன் தொடர்ச்சியாக லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில், 136 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி, 46 மெகா வாட்டாக குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி